Posts

மாடி தோட்டம்

Image
மாடித் தோட்டம் அமைப்பது எப்படி? மாடித் தோட்டம் என்றவுடன் நம் நினைவில் இருப்பது மேற்கூரை (காங்கிரீட்) பாதுகாப்பாகும் . மேற்கூரையை பாதுகாப்பதற்கு கடைப்பிடிக்க வேண்டிய வழிகள். மாடியில் உள்ள தளத்தில் இரப்பர் கோட் பெயிண்ட் அடிக்க வேண்டும். அதிக கனம் இல்லாத ஜாடிகள், மண் தொட்டி என்றால் டெரகோட்டா மண் தொட்டி, மாடித் தோட்டத்திற்கென்றே வடிவமைக்கப்பட்ட ப்ளாஸ்டிக் பைகள், ப்ளாஸ்டிக் தொட்டிகள் அல்லது சுத்தம் செய்யப்பட்ட பெயிண்ட் வாளிகள் இவற்றில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்ய வேண்டும். இடுபொருள்கள் ஒரு தாவரம் நன்கு வளர வேண்டுமென்றால் வளமான மண் தேவை. ஆனால் மண்வைத்து மாடித் தோட்டம் அமைத்தால் மாடி காங்கிரீட் விரைவில் பலமிழந்துவிடும். ஆகையால் மண்ணிற்கு பதிலாக நல்ல வளமான இடுபொருட்களை இட வேண்டும். மாட்டுச்சாணமும், மக்கிய தேங்காய் நார் கழிவுகளும் கனமில்லாத வளமான இடுபொருள்களாகும். தேங்காய் நார் கழிவுகள் கேயர்கேக் வடிவில் கிடைக்கின்றது. மக்கிய மாட்டுச்சாண‌ம் கிடைக்கவில்லை என்றால் காய்ந்த எருவாட்டியை பயன்படுத்தலாம். தேங்காய் நார் கழிவு இரண்டு பங்கும், மாட்டுச்சாண‌ம் ஒரு பங்கும், சமையலறை கழிவு ஒரு பங்கு...

நம்மாழ்வார் அய்யாவின் வாழ்கை வரலாறு

  நம்மாழ்வார் ஐயாவின்   வாழ்க்கை வரலாறு என்றென்றும் ஒவ்வொருவருக்குள்ளும், இயற்கையிலும் வாழ்ந்து கொண்டிருக்கும் இயற்கை வாழ்வியல் அறிஞர் திரு. கோ. நம்மாழ்வார் ஐயா அவர்களின் வாழ்க்கை வரலாறு என்பது ” புழுதியிலும் புழுதியாய் வாழ்பவர்கள் மற்றும் இளைஞர்கள் தங்களுக்கான இன்றைய உலகை கட்டமைக்க பெரிதும் உதவியாக இருக்கும் நம்பிக்கை வழிகாட்டி என்பதில் யாருக்கும் ஐயமில்லை. ஐயா அவர்கள் தன்னுடைய 76 ஆண்டுகால வாழ்வில் பல்வேறுபட்ட  பயணங்களை மேற்கொண்டவர். அந்த பயணங்களில் மக்களிடம் தான் கற்றுக் கொண்ட முழு வாழ்வியல் அனுபவங்களையும் தன் கடைசி மூச்சு இந்த உலகை விட்டு பிரியும் தருணம் வரையில் , சுய நலம் பாராமல் அந்த பொதுமக்களுக்கும், இளைஞர்களுக்குமே கொண்டு சேர்த்தவர். ஐயா அவர்களின் இந்த அயராத முயற்சியில் பொதுமக்களின் பங்களிப்பு என்பது மிக மிக உயர்வானது. ஆரம்பத்தில் ஐயாவின் செயல்பாடுகள் இயற்கை வழி விவசாயத்தை பொதுமக்களிடம் சேர்ப்பதில் தொடங்கியது. பின்னர் அது மட்டுமே மக்களுக்கான இழந்த சுயசார்பு வாழ்வியலை மீட்க உதவாது. எனவே அனைவரின் வாழ்வியலும் இயற்கை என்பது ஒன்றாக கலக்க வேண்டும் என முடி...

செலவில்லாமல் அதிக லாபம்

Image
டீசல் சிக்கனமும் பம்ப்செட் தேர்வும் சந்தையில் கிடைக்கும் பல்வேறு பம்ப்செட்களுக்கு தண்ணீரை பம்ப் செய்வதற்கு வெவ்வேறு அளவுகளில் டீசல் தேவைப்படுகிறது. எனவே, ஐ.எஸ்.ஐ., முத்திரை மற்றும் நட்சத்திரம் லேபிள் செய்த பம்ப்பை தேர்வு செய்வது முக்கியம். அது மட்டும் போதாது. விவசாயிகள் தங்களின் கிணற்றுக்கும், தண்ணீர் தேவைக்கும் ஏற்ப பம்ப்பை தேர்வு செய்ய வேண்டும். பக்கத்து தோட்டத்தில் பயன்படுத்தும் பம்ப் நல்லதாக இருந்தால், அது தங்களுக்கும் நல்லதாக இருக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. ஐ.எஸ்.ஐ., முத்திரை பம்ப்பை சரியான வேகத்தில் இயங்கச் செய்வதற்கு சரியான இன்ஜினையும் தேர்வு செய்ய வேண்டும். இதற்கு ஒரு நிபுணரிடம் கலந்து ஆலோசனை செய்தல் நலன் பயக்கும். பம்ப்பை இயக்குவதற்கு போதிய குதிரை சக்தி (எச்.பி.) திறன் உள்ள இன்ஜினை தேர்வு செய்ய வேண்டும். இன்ஜினுக்குத் தேவைப்படும் சக்தியின் அளவை ஒரு நிபுணர் கணக்கிட முடியும். எப்போதுமே, பிரபலமாகவும் நல்ல தரமானதாகவும் உள்ள இன்ஜினை தேர்வு செய்வது நல்லதாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும். இன்ஜினில் ஐ.எஸ்.ஐ., முத்திரை இருக்கிறதா என பார்க்க வேண்டும். திறன் மிக்க...

வீட்டிலேயே இயற்கை விவசாயம்

லாபம் கொடுக்கும் விவசாயம்

இயற்கை உரங்களால் ஏற்படும் நன்மைகள்

இயற்கை விவசாயத்தில் சாதித்தவர்கள்