மாடி தோட்டம்
மாடித் தோட்டம் அமைப்பது எப்படி? மாடித் தோட்டம் என்றவுடன் நம் நினைவில் இருப்பது மேற்கூரை (காங்கிரீட்) பாதுகாப்பாகும் . மேற்கூரையை பாதுகாப்பதற்கு கடைப்பிடிக்க வேண்டிய வழிகள். மாடியில் உள்ள தளத்தில் இரப்பர் கோட் பெயிண்ட் அடிக்க வேண்டும். அதிக கனம் இல்லாத ஜாடிகள், மண் தொட்டி என்றால் டெரகோட்டா மண் தொட்டி, மாடித் தோட்டத்திற்கென்றே வடிவமைக்கப்பட்ட ப்ளாஸ்டிக் பைகள், ப்ளாஸ்டிக் தொட்டிகள் அல்லது சுத்தம் செய்யப்பட்ட பெயிண்ட் வாளிகள் இவற்றில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்ய வேண்டும். இடுபொருள்கள் ஒரு தாவரம் நன்கு வளர வேண்டுமென்றால் வளமான மண் தேவை. ஆனால் மண்வைத்து மாடித் தோட்டம் அமைத்தால் மாடி காங்கிரீட் விரைவில் பலமிழந்துவிடும். ஆகையால் மண்ணிற்கு பதிலாக நல்ல வளமான இடுபொருட்களை இட வேண்டும். மாட்டுச்சாணமும், மக்கிய தேங்காய் நார் கழிவுகளும் கனமில்லாத வளமான இடுபொருள்களாகும். தேங்காய் நார் கழிவுகள் கேயர்கேக் வடிவில் கிடைக்கின்றது. மக்கிய மாட்டுச்சாணம் கிடைக்கவில்லை என்றால் காய்ந்த எருவாட்டியை பயன்படுத்தலாம். தேங்காய் நார் கழிவு இரண்டு பங்கும், மாட்டுச்சாணம் ஒரு பங்கும், சமையலறை கழிவு ஒரு பங்கு...